புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொட்டகலை பிரதான பாதையில் குடாஓயா பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


ஹட்டனில் பொதி பரிவர்த்தனை சேவையில் ஈடுபடுகின்ற இளைஞர் ஒருவர் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்திலிருந்து பொதியொன்றைப் பெற்றுக்கொண்டு முச்சக்கர வண்டியில் ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த போது நேற்று (10) இரவு எட்டு மணியளவில் குடாஓயா பகுதியில் அந்த இளைஞன் செலுத்திச் சென்ற முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகி இருபதடி பள்ளத்தில் விழுந்துள்ளது.

இந்த விபத்தைக் கண்ட பொது மக்கள் உடனடியாக முச்சக்கர வண்டியைச் செலுத்தி சென்ற இளைஞனை மீட்டு கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கொட்டகலை தவாலமலை தோட்டத்தைச் சேர்ந்த 23 வயதான எஸ்.ஸ்ரீதரன் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top