இந்தியா-திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வாத்தாள் (45). இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 7ம் தேதி தெய்வாத்தாள் வீட்டில் இருந்தார்.
அங்கு வந்த மாமனார் கருப்பண்ணன் (85), தெய்வாத்தாளை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். படுகாயம் அடைந்த தெய்வாத்தாளை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். அலங்கியம் போலீசார் கொலை வழக்கு பதிந்து கருப்பண்ணனை கைது செய்தனர்.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், மருமகள் எனக்கு சாப்பாடு போடுவதில்லை. இதனால் பட்டினி கிடந்தும், ஓட்டலில் சாப்பிட்டும் சமாளித்து வந்தேன்.
அந்த ஆத்திரத்தில் கொலை செய்தேன் என கூறியுள்ளார். இவரது மகன் கருப்பசாமி கூறுகையில், தந்தைக்கு சொந்தமாக 75 சென்ட் இடம் உள்ளது. வட்டிக்கு பணம் விட்டு, அதில் வரும் வருமானத்தில் அவர்தான் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார்.
சாப்பாடு போட நாங்கள் மறுத்ததில்லை. எதற்காக கொலை செய்தார் என தெரியவில்லை என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக