புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கந்தானை, இந்திப்பிட்டிய பிரதேசத்தில் குழந்தை ஒன்று சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிரத்துள்ளனர்.


ஒரு வயதும் ஒரு மாதமும் மட்டுமேயான குழந்தை ஒன்றின் சடலம் இன்று (11) காலை முத்துராஜவெல காட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

குழந்தை நேற்று இரவு வீட்டில் நித்திரையில் இருந்தவேளை குழந்தையின் தாய் பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.

தாயார் மிண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது குழந்தை காணாமற்போயிருந்ததாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவரது வீட்டிற்கு அருகிலுள்ள முத்துராஜவெல காட்டிலிருந்து குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top