மட்டக்களப்பு-வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழக்காலைச் சந்தியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் போது ட்ரக்டர் பெட்டி தலையால் ஏறி முனைக்காட்டைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு பணற்பிட்டி வீதியில் உள்ள வாழக்காலைச் சந்தியில் வைத்தே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
மணற்பிட்டிப் பகுதியில் இருந்து செங்கல் ஏற்றிவந்த ட்ரக்டர் சாரதியுடன் தாண்டியடி வைத்தியசாலையில் மருந்து எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி குழந்தை மூவரும் கதைத்து நின்று விட்டு ட்ரக்டரும் மோட்டார் சைக்கிளும் புறப்பட்ட போது மோட்டார் சைக்கிள் சறுக்கிய போது பின்னால் இருந்த குடும்பப் பெண் ட்ரக்டர் பெட்டிக்குள் வீழ்ந்ததில் பெட்டி டயர் தலையில் ஏறியதில் தலைக் கவசமும் முற்றாக சேதமடைந்த சம்பவ இடத்திலேயே மூன்று பிள்ளையின் தாயான திருமதி கலியன் லலிதா (42 வயது) குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது கணவனுக்கோ குழந்தைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
வவுணதீவுப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொள்வதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக