கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் ரேத்தா(Rehtaeh) (15) என்ற பள்ளி மாணவி சகமாணவர் நால்வரால் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாலும், பள்ளி மாணவர்கள் தொடர்ந்து
கேலி செய்ததாலும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தப் பிரச்னைகளை அவர் தனது முகபுத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு வழக்குப் பதிய முடியாது என்று பொலிசார் ரேத்தாவின் தாயாரிடம் தெரிவித்து விட்டனர்.
கடந்த செவ்வாய்கிழமை அன்று சட்டத்துறை அமைச்சர் ரோஸ் லாண்டிரியும்(Ross Landry) பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட இயலாது என்று கூறிவிட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கோல் ஹார்பர்(Cole Harbour) என்ற ஊரில் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து நான்கு பேர் ரேத்தாகை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். அந்த காட்சியை நால்வரில் ஒருவன் படமாக எடுத்த அனைத்து மாணவர்ளும் பார்க்கும் படி செய்தான்.
இந்தக் கேவலம் கண்டு பொறுக்காத ரேத்தாவின் குடும்பத்தினர் ஸ்கோஷியா மாகாணத்திலிருந்து ஹேலிஃபேக்சுக்கு இடம் மாறினர்.
அங்கு அவரை மருத்துவமனையில் வைத்து ஆறு வாரங்களாக சிகிச்சை அளித்தனர். ஆனால் சில நாட்களில் ஹேலிஃகே்சிலும் சிலர் அவரை கேலி செய்யத் தொடங்கினர். பின்னர் ரேத்தாவின் குடும்பம் டார்ட்மவுத் நகருக்கு இடம்பெயர்ந்தது.
அங்கு சில மாணவர்கள் ரேத்தாவின் வீட்டுக்கு வந்து அவருடன் பேசி ஆதரவாக இருந்தனர். ஆனால் திடீரென்று கடந்த ஏப்ரல் நான்காம் நாள் ரேத்தா குளியலறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், ரேத்தாவை மாணவர்கள் கற்பழித்ததை நம்புவதாகவும், ஆனால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க சாட்சிகள் ஆதரவாக இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக