16 வயதுக்கு குறைந்த சிறுமி யொருவரை பலாத்காரமாக கடத்தி தடுத்து வைத்துக் கொண்டு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரொவருக்கு கேகாலை உயர் நீதிமன்ற நீதியரசர் செல்வி மேனகா
விஜேசுந்தர இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் 25,000 ரூபா அபராதமும் விதித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் இது ஐந்து வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை எனவும் நீதியரசர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
ஹெட்டிமுல்ல தெமுனுகொல்ல என்ற இடத்தைச் சேர்ந்த நளின்குமார திசாநாயக்க என்பவருக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி அல்லது அதை அண்டிய தினமொன்றில் 15 வயது 7 மாதங்கள் நிரம்பிய யுவதி நீராடச் செல்லும்போது முச்சக்கர வண்டியொன்றில் கடத்திச் சென்று தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.