வவுனியாவில் 13 வயது பாடசாலை மாணவி அவரது மைத்துனரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்
பட்டுள்ளதாக, வவுனியா பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி யோ.ஜெயக்கெனடி தெரிவித்துள்ளர்.
வவுனியா, சாந்தசோலை கிராமத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி, அவருடைய சகோதரியான அக்காவின் கணவரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இச் சிறுமி பல நாட்களாக பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையிலும் சிறுமியை பாதுகாக்கவோ, அவருக்கு உதவவோ குடும்பத்தினர் எவரும் முன்வரவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சிறுமி அக்கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவரிடம் சிறுமி நேற்று முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து இத்தகவல் எமக்கு அக் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமக்கு அக் கிராமத்திற்கு சென்று சிறுமியை அழைத்துச் சென்று வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக யோ.ஜெயக்கெனடி குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி தலைமையில் பெண்கள் பிரிவு பொலிஸாரும் சாந்தசோலை கிராமத்திற்கு சென்று கைது செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.