- பிரித்தானியாவில் நியூபோர்ட் நகரை சேர்ந்தவர் ஸ்டீவ் (38). இவரது மனைவி ஜோ ஷார்ட் (37). கடந்த 1997-ம் ஆண்டு இவர்கள் இருவரும்
இது போன்று இதுவரை 19 தடவை கருச்சிதைவு நடந்தது. இதனால் மனவருத்தம் அடைந்த ஜோ காபி, டீ மற்றும் அதிக அளவில் ஆப்பிள் சாப்பிடுவதால் தனக்கு கருச்சிதைவு ஏற்படுவதாக கருதினார். அதற்காக அவற்றை தவிர்த்து வந்தார். இருந்தும் தொடர்ந்து கருச் சிதைவு ஏற்பட்டது.
அதை தொடர்ந்து டாக்டர் ரிச்சர்ட் பென்கெத்தை சந்தித்து சிகிச்சை பெற்றார். அவர் ‘ஜோ’வுக்கு 4 மணி நேரம் ஆபரேசன் செய்து கருச்சிதைவு ஏற்படுத்தும் திசுக்களை உடலில் இருந்து அகற்றினார்.
இந்த நிலையில் 20-வது தடவையாக ஜோ ஷார்ட் கர்ப்பம் தரித்தார். உடனே டாக்டரிடம் சென்று ஆலோ சனை பெற்று அதன்படி நடந்தார். எனவே, அவருக்கு இந்த முறை அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு எமிலி என பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வருகிறார்.
15 ஆண்டுகளில் 19 தடவை நடந்த கருச்சிதை வுக்கு பின்னரும் தான் தாய்மை அடைந்திருப்பதை பெருமையாக உணர்வதாக ஜோ ஷார்ட் தெரிவித்தார்.