புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அநுராதபுரம், அபயபுரம் வீட்டுத்தொகுதியிலுள்ள வீடொன்றில் இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று (28) இரவு குறித்த வீட்டுக்குச் சென்ற ஒரு குழுவினர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கூரிய ஆயுதத்தினால் குத்தி இப் பெண்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 62 வயதான தாய் மற்றும் 23 வயதுடைய மகள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 62 வயதான தந்தை அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் பிரச்சினை காரணமாக இக் கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Top