அமெரிக்காவின் அலாஸ்காவிலிருந்து ஒரேகானுக்கு அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. ஒரேகானில் இறங்குவதற்கு தயாரகிக்கொண்டிருந்த போது அந்த விமானத்தில் இருந்த 23 வயதான
அலெக்சாண்டர் மைக்கேல் ஹெர்ரெரா எதோ ஒரு அறிக்கையை எழுதினான்.
பின்னர் அவன் அவசரகால வெளியேறும் கதவை திறக்க முயற்சி செய்தான். அப்போது இருவர் எழுந்து சீட் பெல்ட் மற்றும் ஷூ கயிறுகளை கொண்டு அவனை கட்டி தடுத்து நிறுத்தினர். அங்கு வந்த விமானச்சிப்பந்திகள் அவரின் காலை கட்டி தூக்கிச்சென்றனர்.
பிறகு விமானம் கீழ் இறங்கும் வரை அவன் அமைதியாக உட்கார்ந்து இருந்தான். பிறகு அவன் மீது விமானத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.