புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

7 வயதுடைய சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் குறித்த சிறுமியின் சிறிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக நகவகத்தேகம
பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம - வெல்வேவ வடக்கு பகுதியைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிங்கள புது வருடம் முடிந்து ஒரு நாள் வீட்டில் தான் தனியாக இருந்தபோது சிறிய தந்தை முதல் முறையாக தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் அதன் பின் தொடர்ச்சியாக அவர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் குறித்த சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து விசாரணை நடத்திய பொலிஸார் 34 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top