புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

புறக்கோட்டை – பெஸ்தியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் தரிப்பிட வளாகத்தில் அநாதரவாக மீட்கப்பட்ட ஆண் குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸார் தேடி வருகின்றனர்.


இந்த ஆண் குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டுபிடிக்கவென பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 2013-03-01ம் திகதியன்று ஆண் குழந்தையொன்று புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஆண் குழந்தை பத்தரமுல்ல சிறுவர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு நீதவானின் உத்தரவின் பேரில் பாணந்துறை பிரஜாபதி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த குழந்தையின் உறவினர்கள் குறித்த தகவலை பொலிஸாரால் பெற முடியாது போனதால் குழந்தையின் புகைப்படம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி பொது மக்களின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறு பத்தரமுல்ல சிறுவர் இல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி குறித்த குழந்தையின் புகைப்படம் மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குறித்து தகவல் அறிந்தோர் உடனடியாக 0112421515 மற்றும் 0112323677 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத் தருமாறு பொலிஸார் வேண்டியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top