ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த அந்தப் பெண்ணின் கணவரைக் கைது
செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த மே 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் பூம்புகர் நாவலடிப் பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பிலேயே சந்தேகத்தின் பேரில் இப்பெண்ணின் கணவர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:
கருத்துரையிடுக