புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது, அதன் அர்த்தம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தன் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்களின் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார். அப்படி அறிந்திருந்தால் ஏற்ற
தாழ்வு பேசமாட்டார். அதனால் இங்கே சாதிப்
பிரிவுகள் பட்டியல்,சாதிப்பிரிவுகளின் உரிமைகளும் கட்டுப்பாடுகளும்; தொழில் அடிப்படையில் சாதிகள் வகைகள் என்ன என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

தமிழ்ச் சூழலில் சாதிப் பிரிவுகள் பட்டியல்
அகமுடையார்
அறிவர்
அருந்ததியர்
அம்பட்டர்
ஆயர்(யாதவர்)
ஆயிர வைசியர், ஆரிய வைசியர்
இல்லத்துப்பிள்ளைமார்
இடையர்
இடையன்
இடைச்சியர்
உடையார்
உழவர்
ஓவியர்
ஓதுவார்
கடசர்
கடையர்
கரையார்
கன்னார்
கணியர்
கள்ளர்
கம்மாளன்
காளார்
குயவர்
குறவர்
கூத்தர்
கைக்கோளர், செங்குத்தர்
கொல்லர்
கொத்தர்
கோவியர்
கோனார்
கோகுலம்
கோமட்டி
சக்கிலியர்
சங்கறுப்பர்
சான்றார்
சிவியார்
செக்கார்
செட்டியார்
செம்படவர்
சேணியர்
சேர்வை
சேர்வாரர்
சேர்வைகாரர்
சேர்வாரத்தனபதி
தச்சர்
தட்டார்
தவசிகள்
தலித்
திமிலர்
துரும்பர்
தேவர்
தேவாங்கர்
நளவர்
நாடார்
நாவிதர்
நாயக்கர்
நாயுடு
நாட்டாமை
நெசவர்
நகரத்தார்
பரதேசி
பரம்பர்
பரதர் - முத்து குளிப்போர்
பரவர்
படையாச்சி
பள்ளர்
பறையர்
பட்டனவர்
பாகர்
பார்ப்பார்
பாணர்
பண்ணாடிகள்
பார்ப்பனர்
பாளையங்காரர்
பிள்ளை
பிராமணர்
பிள்ளைமார், கோட்டை பிள்ளமார்
பிள்ளை(யாதவர்)
மடைப்பள்ளியர்
மறவர்
முக்கியர்
மருத்துவர்
மள்ளர்/பள்ளர்(தேவேந்திரகுல வேளாளர்)
யாதவர்
யாதவ்
யாதவா
யாதவாலு
யது குலம்
யாதவ ரெட்டி
யாதவா பிராமீன்
யாதவா பிராமணர்
ரெட்டியார்
வடுக ஆயர்(வடுகாயர்)
வடுக இடையர்
வன்னியர்
வண்ணார்
வணிகர்
வேளாளர்
வேட்டைக்காரர்

யாழ்ப்பாணத்து சாதிப்பிரிவு
அம்பட்டர்
இடையர்
கடையர்
கரையார்
கன்னார்
கள்வர்
குயவர்
குறவர்
கைக்கோளர்
கொல்லர்
கொத்தர்
கோவியர்
சக்கிலியர்
சான்றார்
சிவியார்
செட்டியார்
சேணியர்
தச்சர்
தட்டார்
தவசிகள்
திமிலர்
துரும்பர்
நளவர்
பண்டாரம்
பரதேசிகன்
பரம்பர்
பரவர்
பள்ளர்
பறையர்
பாணர்
பிராமணர்
மடைப்பள்ளியர்
மறவர்
முக்கியர்
வண்ணார்
வேளாளர்
யாதவர்


சாதிப்பிரிவுகளின் உரிமைகளும் கட்டுப்பாடுகளும்
யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன:வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:


நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும், சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே ........ அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்.
மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன:

சாதிமணவீடுமரணவீடு-
பிராமணர்மேளவாத்தியம்--
வெள்ளாளர்மேளவாத்தியம்பறைமேளம்நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
செட்டிகள்மேளவாத்தியம்பறைமேளம்நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
கோவியர்மேளவாத்தியம்பறைமேளம்-
மறவர்மேளவாத்தியம்பறைமேளம்-
அகம்படியர்மேளவாத்தியம்பறைமேளம்-
இடையர்மேளவாத்தியம்பறைமேளம்-
சிவியார்மேளவாத்தியம்பறைமேளம்-
ஆண்டிகள்-சங்கு-
முக்கியர்-ஒற்றைச்சங்கு-
கரையார்-ஒற்றைச்சங்கு-
கம்மாளர்- சேகண்டி,குடமுழவு-
குயவர்-குடமுழவு-
அம்பட்டர்-தாரை-
வண்ணார்-தாரை-


தொழில் அடிப்படையில் சாதிகள்
முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே 
பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:

தொழில்
பிராமணர் கோயில்களில் பூசை செய்தல், குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.
வெள்ளாளர் நில உடைமையாளர் / வேளாண்மை
செட்டிகள் வணிகம்
சிவியார் சிவிகை காவுதல்.
செம்படவர் மீன் பிடித்தல்
சான்றார் எண்ணெய் உற்பத்தி
கன்னார் பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்.
தட்டார் பொன் அணிகள் செய்தல்
கரையார் மீன்பிடித்தல், கப்பலோட்டுதல்
முக்கியர் -
திமிலர் மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல்
வண்ணார் துணி வெளுத்தல்
தச்சர் மரவேலை
சேணியர் துணி நெய்தல்
குயவர் மட்பாண்ட உற்பத்தி
கொல்லர் இரும்பு வேலை
அம்பட்டர் முடி வெட்டுதல்
கோவியர் -
நளவர் மரம் ஏறுதல், கள் உற்பத்தி
பள்ளர் வேளாண்மை தொழிலாளர்
பறையர் பறையடித்தல்


தொடரும் 

1 கருத்து:

  1. நல்ல பதிவு. சாதியில் இத்தனை பிரிவுகளா? என வாயை பிளக்க வைத்தது இந்த வார சாதி பற்றிய இந்த தொடர். மிக சிறப்பான பதிவு. பாராட்டுக்கள் பிரேம்

    பதிலளிநீக்கு

 
Top