புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரேசில் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டால்பின் மீன்களை, மக்களே காப்பாற்றி கடலில் விட்டனர். பிரேசிலின் 2வது பெரிய நகரம் ரியோ டி ஜெனிரோ. இங்குள்ள கடற்கரையில் ஏராளமான மக்கள் குவிவார்கள். சூரிய குளியல், நீச்சல் போன்றவற்றில்
ஈடுபட பலர் வந்து செல்கின்றனர்.சில நாட்களுக்கு முன்பு கடற்கரையில் வழக்கம்போல் பலர் குவிந்தனர்.பலர் கடலில் நீச்சலடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏராளமான டால்பின் மீன்கள் கடற்கரையில் உயிருடன் ஒதுங்கின.

அவற்றை பார்த்து கடற்கரையில் இருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால், டால்பின்களிடம் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த மக்கள் அருகில் சென்று பார்த்தனர். அவை உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக நீர் சறுக்கு பயிற்சி பெற்ற பலர் விரைந்து சென்றனர். டால்பின்களின் வால் பகுதியை பிடித்து இழுத்துக் கொண்டு கடலின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். இப்படி 30க்கும் அதிகமான டால்பின்களை இழுத்து சென்று கடலின் ஆழமான பகுதியில் விட்டனர்.

டால்பின்களும் அங்கு துள்ளி குதித்து சென்றன. அதை பார்த்து பிரேசில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டால்பின்களை காப்பாற்றியவர்களை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.மீட்பு நடவடிக்கையை கடற்கரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top