புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம், பொன்னாலைப் பகுதியில் வயல் வெளியில் அமைந்திருந்த நன்நீர் கிணற்றுக்குள் கழிவு ஓயில், குப்பைகளைக் கொட்டி விஷமிகள் குடிதண்ணீரை அசுத்தப்படுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த நாச வேலையைச் செய்துள்ளதால், அந்த கிணற்றில் குடிதண்ணீரைப்
பெற்றுவந்த அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பொன்னாலை குளத்துக்கு அருகில் இருந்த கிணறும் தற்போது பாவனைக்கு உதவாத தண்ணீராக மாறியுள்ளது.

இந்த கிணற்றுக்கு மேலாக சிமெந்தால் மூடிக்கட்டப்பட்டு சிறிய துவாரம் மட்டும் விடப்பட்டுள்ளது. இதனால் கிணற்றுக்குள் வௌவால்கள் குடிகொண்டு தண்ணீரை அசுத்தப்படுத்துகின்றன.

குறித்த கிணற்றின் மூடியை அகற்றிச் சுத்தப்படுத்தி தரும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாம் பலதடவைகள் கேட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

வயல் வெளியில் எஞ்சியிருந்த கிணற்றையும் விஷமிகள் அசுத்தம் செய்துள்ளனர். இதனால் தற்போது குடிநீரைப் பெறுவதில் தாம் நீண்ட தூரத்துக்கு அலைய வேண்டி ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் 22ஆம் திகதி பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குளத்துக் அருகிலிருக்கும் கிணற்றையாவது தூய்மைப்படுத்தி பாவனைக்கு விடுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top