புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குழந்தை மனதுடைய F எழுத்துக்காரர்களுக்கு எங்கும் துணிச்சலுடன் சென்று காரியங்களை முடித்துக்கொள்பவர்கள் F எழுத்துக்காரர்கள். பார்ப்பதற்கு கரடுமுரடாக இருந்தாலும், குழந்தை மனது இவர்களுக்கு. இவர்களின் நிர்வாகத்திறன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும். ஒரே நேரத்தில் பல
நிறுவனங்களில் வேலைக்குச் சேர அழைப்பு வரும். இவர்கள் நட்பின் இலக்கணமாக விளங்குவர். நண்பர்களை அரவணைத்துச் செல்லும் இவர்கள் நண்பர்களின் அபிப்பிராயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டால் வாழ்வில் உயரலாம்.

ஆன்மீகத்தின் மீது பற்று இருக்கும். பெரும்பாலானவர்கள் அறிஞராக விளங்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுத் திகழ்வார்கள். இவர்கள் புகழுக்கு அடிபணிவர். தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இதன் காரணமாக இவர்களை ஆணவம் பிடித்தவர் என காது படும்படியே சிலர் தூற்றுவார்கள். ஆனால், அதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் தங்கள் சொந்தப் புராணத்தைத் தொடர்வார்கள். செய்நன்றி மறக்காதவர்கள். உடல், மனபலம் நிறைந்த இவர்களை வியாதிகள் அதிகமாக அண்டாது. அப்படியே வந்தாலும் தாங்கும் சக்தி அதிகம். இவ்வெழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு பெயரின் மற்ற பகுதிக்கும் பரவுவதால் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவர்.

சோர்வுடன் இருப்பவர்களை உத்வேகப்படுத்தி சுறுசுறுப்படையச் செய்து விடுவர். பேச்சினால் அடுத்த வரை ஈர்க்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. எப்பொழுதும் நாட்டைப் பற்றியும், எளிமை பற்றியும் பேசும் இவர்கள், தங்கள் பிடிவாதத்தால் பல நண்பர்களை இழக்க நேரிடலாம். பலருக்கு ஆலோசனை சொல்லும் இவர்கள். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையை ஏற்பதில்லை. நல்ல ஆலோசனைகளை ஏற்று நடந்தால் பல நன்மைகளை அடையலாம்.

அதிகமான பேச்சாற்றலால் பல நண்பர்கள் காணாமல் போய்விடுவர். இயற்கையின் சீற்றம்போல் இவர்களின் நடவடிக்கை இருக்கும். யாரும் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நண்பர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். உறவினர்களும் இவர்களுக்கு எதிராகச் செயல்பட நேரிடலாம். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள். சிலருக்குத் தங்கள் பழங்காலக் கதையை மற்றவர்களிடம் அளந்து விடுவதில் அலாதிப்பிரியம் உண்டு. ஆனால், தேவையற்ற விஷயங்களைப் பிறரிடம் கூறினால் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். இதை இவர்கள் தவிர்ப்பது நல்லது. பிறவியிலேயே பெருந்தன்மை கொண்ட இவர்களுக்குத் தன்னம்பிகை அதிகம். சுதந்திரமான மனப் போக்கை விரும்புவார்கள்.

இளகிய மனமும், இரக்க சுபாவமும் அதிகமான இவர்கள் தர்மவான்களாய் விளங்குவர். அறிவியல் ரீதியாக மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்கள். தங்களைப் பற்றிப் பெருமையடித்தாலும் பிறரது சிறப்புத் தன்மையையும் ஏற்றுக் கொள்வார்கள். இரும்பு போன்ற உறுதியான உள்ளம் உண்டு. நிதானத்துடன் நடந்து எதிலும் வெற்றி காண்பார்கள். A,I,J,Q போன்ற முன் எழுத்து வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நலம்.

இந்த எழுத்துக்குரிய பிரபலங்கள்:

ஃபரூக் அப்துல்லா (காஷ்மீர் முன்னாள் முதல்வர்)
ஃபிராங்களின் ரூஸ்வெல்ட் (அமெரிக்க முன்னாள் அதிபர்)
ஃபாரா கான் (நடன இயக்குநர்)

G ஐ முதலெழுத்தாகக் கொண்டவர்கள் புத்திசாலிகள்

ஊக்கமும், உழைப்பும், கடுமையான கட்டுப்பாடுகளும், அடக்கமும், பிறரிடம் மரியாதையும் தனக்கு மரியாதை தர வேண்டுமென எதிர்பார்ப்பும், நாணயமும், நல்லியதமும், நியாயமும், சிக்கனமும், படாடோபத்தை விரும்பாத குணமும் கொண்டவர்கள் பு எழுத்துக்காரர்கள். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர்கள், தன் சொத்துகளைப் பிறருக்கு அளிப்பதில் அளவுகோல் ஒன்றை வைத்துக்கொள்வர். ஆனால், பிறரை நிறைய தர்மம் செய்யுங்களேன் எனப் பிறருக்கு அறிவுரை சொல்வார்கள்.

ஒரு காரியத்தைத் துவங்கிவிட்டால், முடிக்காமல் விடமாட்டார்கள். இடைவிடாத முயற்சி உடையவர்கள். பல நற்குணங்களால் உயர்பதவிகள் இவர்களைத் தேடி வரும். எந்தப் பதவியில் இருந்தாலும் உயரதிகாரிகளுக்குத் கட்டுப்பட்டுப் பணியாற்றுவர். தொழில் தர்மம் தவறமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். குடும்ப விஷயங்களைப் பிறரிடம் சொல்லமாட்டார்கள். தேசநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்வர். இளவயதிலேயே பல நற்காரியங்களைச் செய்து புத்திசாலி எனப் பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர்தான்.

கண்களில் காந்த சக்தியுடையவர்கள். புதிய பல விஷயங்களை உலகிற்குத் தருவர். பின்னால் நடக்கப்போகும் பல நிகழ்வுகளை சரரியாக யூகித்துச்; சொல்வர். சொன்னது நடக்கும். எந்தச் செயலையும் திட்டமிட்டுச் செய்து நற்பெயர் எடுப்பர். உணவுக் கட்டுப்பாடு மிகுந்த இவர்கள் இனிப்பு, பருப்பு வகை, நெய் கலந்த சைவ உணவையே அதிகம் விரும்புவர். நடக்காது எனத் தெரிந்தும் சில விஷயங்களில் அபரிமிதமான தன்னம்பிக்கை வைப்பது இவர்களின் பலவீனம். இதனால் சில நிகழ்வுகள் தோல்விப் பாதைக்கு இழுத்துச் செல்லலாம். இவர்கள் யாரையும் நம்புவது இல்லை. சரித்திர கால இடங்கள், மன்னர்கள், பெரியோர்களை சந்திப்பதில் அதிக விருப்பமுடையவர்கள்.

உயர்ந்த தோற்றம், களையான முகம், நிமிர்ந்த நடை உடையவர்கள். பணக்காரராக இருப்பாரோ என்று எண்ணவைக்கும் அளவுக்கு வெளித்தோற்றம் கொண்டவர்கள். தன் செல்வாக்கைக் குறைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் இறங்கமாட்டார்கள். பேச்சால் கவர முடியாதவரிடம் மீண்டும் பேசமாட்டார்கள். வியாபாரியாக இருந்தால் மனசாட்சி ஏற்றுக்கொள்ளும் அளவிற்குத்தான் தரகு பெறுவர். அசையாத் தொழில் பெரும் செல்வம் தரும்.

கல்வி நிறுவனத்திலும், ஆன்மிகத் துறையிலும் வங்கிகளிலும் வேலை கிடைத்து, நற்பெயரும், புகழும், பொருளாதார ஏற்றமும் பெறுவர். லட்சியவாதிகளாக விளங்கும் இவர்கள் F,Q,P ஆகிய முதல் எழுத்தைப் பெற்றவர்களிடமும் 6 எண் வரும் நாட்களிலும் கவனமாக இருப்பது நல்லது.

Gஐ முதலெழுத்தாகக் கொண்ட பிரபலங்கள்:

குருநானக்
ஜோர்ஜ் பெர்னாட் ஷா
கோபால கிருஷ்ண கோகலே

H’  என்ற எழுத்தில் உங்கள் பெயர் துவங்குகிறதா? 

H’  என்ற எழுத்தில் உங்கள் பெயர் துவங்குகிறதா? குதிரை வேகத்தில் பாய்ந்து சென்று விரைவில் காரியம் முடிப்பதில் நீங்கள் பலே கில்லாடி பேச்சினாலும், செயல்களாலும் பிறர் கவனத்தை எளிதில் கவர்வீர்கள். கவலையான நேரத்திலும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் இவர்கள். உங்கள் எழுத்தில் சூரியக்கதிர்கள் குவிக்கப்படுவதே இதற்குக் காரணம். சில நேரங்களில் நிதானம் தவறுவதுண்டு. எனவே, கட்டுப்பாட்டை மனத்தளவில் வளர்த்துக் கொள்வது நல்லது.

இவர்களுக்கு ஒரு நல்ல ஆலோசகர் அவசியம் தேவை. கேலி, கிண்டலுடன் ஹாஸ்ய வெடிகளை வெடித்து. மற்றவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவர். ஆடை அணிவதில் தனிக் கவனம் செலுத்துவார்கள். எந்த உணவையும் தவிர்க்க மாட்டார்கள். வாசனைத் திரவியங்களின் பேரில் அதிக விருப்பம் உண்டு.

எந்தக் காரியத்திலும் வெற்றி உறுதியாகக் கிடைக்குமா என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகே அதில் இறங்குவர். அடுத்தவர்களை அன்பாகப் பேசி வேலை வாங்குவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எந்தச் செயலைச் செய்யும்போதும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பர். அழகான தங்குமிடங்களும், வர்ணஜாலமுள்ள காட்சிகளும். அலங்கார வீடுகளும் இவர்கள் மனதில் ஆழப்பதிந்தவை. பெண் விஷயத்தில் சிலர் கொஞ்சம் `வீக்’ என்பதால், சுதாரிப்பாக இருப்பது சிறந்தது. மசால் கலந்த உணவு வகை, மாமிச உணவை விரும்பி உண்பர். இதனால், அடிக்கடி வயிறு உபாதைகளுக்கு உட்படுவர். நடத்த முடியாத விஷயங்களைக் கூட, உறுதியான பேச்சினால் நடத்தி பிறரை ஆச்சரியமடையச் செய்வர்.

அனாவசியச் செலவு செய்வதிலும் கில்லாடி. இதைக் கட்டுப்படுத்துவது வாழ்வின் பிற்பகுதிக்கு நலன்தரும். வந்தால் வரட்டும், போனால் போகட்டும் என்பதில் அதீத நம்பிக்கை வைத்து, பொருளாதாரக் குறைபாட்டை ஏற்படுத்திக் கொள்வர். இதைத் தவிர்த்து, திட்டமிட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தை நலமாக்கிக் கொள்ளலாம்.

வெற்றிகளைக் குவிப்பது இவர்களின் திறமை. மாயமந்திர, தந்திரங்கள் இவர்களுக்கு அத்துப்படி, பொதுவாழ்க்கையில் நிரம்ப அக்கறை கொள்ளும் இவர்களால், நலிந்து போன தொண்டு நிறுவனங்கள் நிமிர்ந்து நிற்கும் பெருமையுண்டு. முண்டாசுக் கவிஞன் பாரதி போல் வரிந்து கட்டிக் கொண்டு, நாட்டிற்காக உழைக்கும் இவர்களுக்கு நன்றியைச் சொல்லலாம்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஆக்கபூர்வ ஆலோசனைகளை வழங்கிக் கொண்டேயிருப்பதால் இவர்களின் பின்னால், ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும். இலவச ஆலோசனைகளை எல்லாருக்கும் சொல்வர். வெளியூருக்குச் சென்றால், `இது புது இடமாயிற்றே. பழக்கமில்லாமல் என்ன செய்வது?” என்பது போன்ற தயக்கம் வரவே வராது. ஏதோ, அதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் போல் மக்களை, தன் சொல்லால் மயக்கி, அவ்வூரின் நம்பர் 1 ஹீரோ ஆகிவிடுவர்.

மற்றவர்களைத் தன் வசம் இழுக்கும் திறமை கொண்டவர்கள். உலகில் எத்தனையோ பேரின்பம் உண்டு என்பதை மனதில் கொண்டவர்கள். உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்றினால் இவர்கள் பல வியாதிகளை விரட்டி விடலாம்.

முதல் எழுத்தாக ‘H’ பெற்றவர்கள்
ஹர்பஜன்சிங் (கிரிக்கெட் வீரர்)
ஹரி (டைரக்டர்)
ஹரிஹரன் (பாடகர்)


‘I’யில் பெயர் துவங்குவோர் வெற்றிக் கனியைப் பறிப்பவர்கள்

மனோதிடம் கொண்டவர். தெளிவான சிந்தனை உடையவர். தோல்விகளைத் துச்சமாக மதிப்பவர். கடின உழைப்பும் காந்த சக்தியுடைய கண்களும் கொண்டவர். அரசாங்க, அரசியல் செல்வாக்கும் நாநயமும் உள்ளவர். இந்த எழுத்தில், கதிரவனின் கதிர்கள் பட்டு, இடமும் வலமும் சிதறுவதால், உறுதியும் குழப்பமும் சம அளவில் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணம் இருக்கும். இவர்களுக்கு அரசியல் பண்ணுவது மிகவும் பிடித்த சமாச்சாரம். அதிகாரம் செலுத்துவதில் மிக முனைப்பாக இருப்பர். யூகத்தின் அடிப்படையில் காரியமாற்றி வெற்றியடைவர். ரோஷக்காரர்களான இவர்களிடம், “உங்களால்தான் எல்லாம் நடக்கிறது” என அவரது புகழ் பாடினால், நமக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வர்.

இடைவிடாத உழைப்பால் பெரும் பதவியையும் பொருளாதார ஏற்றத்தையும் அடைந்துவிடுவர். பொறாமைக்காரர்களைக் கண்டால் பொசுக்கிவிடுவர். அந்த அளவிற்கு புறங்கூறுதல் இவர்களுக்குப் பிடிக்காத காரியமாகும். இவர்களுக்கு சூடான, காரம் அதிகமுள்ள உணவு வகை பிடிக்கும். கௌரவப் பிரச்சனையால் பல நண்பர்களை இழக்கவேண்டி வரலாம்.

இவர்களின் குணாதிசயம் போன்றே உடல்வாகும் நன்றாகவே இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எதிர்ப்புகளைத் துச்சமாக மதிக்கும் இவர்களுக்கு, கண்கள் எரிச்சலாக இருக்க வாய்ப்பு உண்டு. எந்தச் செயலிலும் தீர்க்கமான சிந்தனைக்குப் பின் இறங்குவதால், தோல்வி என்பது மிகக் குறைவு.

இவர்களுக்கு அரசாங்கப் பதவி எளிதில் கிடைத்துவிடும். பணியில் ஏனோ, தானோ என்று இருப்பதில்லை. நேர்மை, நீதி, நியாயம், கண்ணியம், நாட்டு நலன் – இவற்றைக் கடைப்பிடித்து நற்பெயர் பெறுவர். அடிமைப்படுவது என்பது அறவே ஆகாது. மாபெரும் நிறுவனங்களை உருவாக்கி நிர்வாகம் செய்யும் இவர்கள், தன் குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குவது, அவர்களைக் குதூகலமடையச் செய்யும். தன் நுண்ணிய அறிவால் பலரும் அறியாத விடயங்களை வெளிக்கொண்டு வருவர். சாஸ்திரம், வானியல், மருத்துவம், இசை, சினிமா, பத்திரிகைத்துறை போன்றவற்றில் சரித்திரம் படைப்பார்கள்.

பொருளாதார ரீதியாக இளம் வயதில் துன்பப்பட்டாலும் 40 வயதிற்கு மேல் இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனப் புலம்பும் அளவிற்குச் சம்பாதிப்பர். கிராமங்களில் இவர்களுக்கு `நாட்டு வக்கீல்’ எனப் பெயருண்டு. அந்த அளவிற்கு மிகச் சரியான நீதி வழங்குவர். நற்பண்புகளால் மற்றவர்களை எளிதில் தன் பக்கம் இழுத்துவிடுவர். தான் வசிக்குமிடத்தில் அழகும் ஒழுங்கும் உயர்வும் இருக்க வேண்டும் என நினைப்பர்.

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஏழை எளியோருக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பொது நிறுவனங்கள் நடத்தி, நலிந்தோரை வாழவைக்கத் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வர் ‘I’இல் பெயர் அமைந்தோர் புத்திசாதுர்யமானவராக இருப்பர் என்பதில் ஐயமில்லை.

முதல் எழுத்தாக ‘I’ஐப் பெற்றவர்கள்:
இந்திரா காந்தி – முன்னாள் இந்தியப் பிரதமர்
ஐசக் நியூட்டன் – விஞ்ஞானி
இளையராஜா – இசையமைப்பாளர்
ஐஸ்வர்யா ராய் – முன்னாள் உலக அழகி, நடிகை


“J’ என்றாலே ஜெயம்தான்

சிறந்த நிர்வாகத் திறமை, நல் எண்ணம், எதிரிகளை பந்தாடும் குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், எதிலும் நிமிர்ந்து நிற்கும் தன்மை, யாருக்கும் அஞ்சாத குணம், பின்வாங்காத தீரமும், கடமையை கண்ணியத்துடன் செய்யும் பக்குவம் ஆகிய பண்புகளுக்கு சொந்தக்காரர்கள் ஒ யில் பெயர் துவங்குபவர்கள்.

கம்ப்யூட்டர் போன்ற நுண்ணிய துறைகளில் அறிவு அதிகம்.  எதையும் இலக்கு வைத்து அடைவதில் விடாமுயற்சி உடையவர்கள்.  சுயகவுரவத்திற்காக எதையும் தாங்கும் இதயம் உடைய இவர்களது எழுத்தில் சூரியக்கதிர்கள் பட்டு, இடப்புறம் அதிகமாக சிதறுவதால், மனதில் போட்ட திட்டங்கள், முடியும் நேரத்தில் மனநெருடலை தருவதாக இருக்கும்.

மகிமை பொருந்திய பூமியின் மேல் உள்ள கடல்நீர் மற்ற கிரகங்களின் மேல் ஊற்றிக் கொள்ளாமல் இருப்பதற்கு, பூமியின் ஆகர்ஷண சக்தியே காரணம் ஆகும்.  இதுபோல் இவர்கள் மேல் பற்று வைத்தவர்கள் வேறு யார் பக்கமும் சாயமாட்டார்கள்.  எதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் பக்குவம் இவர்களை மாபெரும் ஆற்றல் மிகுந்தவர்களாக வெளிப்படுத்தும்.

தவறு செய்தவர்களை கண்டிப்பதில் யானையைப் போன்றவர்கள்.  சிறப்பான வாழ்க்கை, கம்பீரம், சுதந்திரத்தன்மை போன்றவற்றை அடி பிறழாமல் காப்பாற்றுவார். அரசாங்கப் பதவிகளும், அரசியல் பதவிகளும் விடாமல் துரத்தி வந்து இவர்களை அலங்கரிக்கும்.  பிறர் செய்தது தவறு என்று தெரிந்துவிட்டால் போதும்.  தண்டனையை உடனே நிறைவேற்றிவிடுவர்.

தவறு செய்தவர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டு, “நீங்கள்தான் என் தெய்வம், மன்னித்து என்னை நல்வழிப்படுத்துங்கள்” என்றால் போது குழந்தையாகிவிடுவர்.  எதிரிகள் இந்த குணாதிசயத்தை பயன்படுத்தி இவர்களை மாட்டிவிட வாய்ப்புண்டு.  கவனம், நுண்ணிய அறிவு படைத்த இவர்கள், அரிதான விஷயங்களை மிக எளிதாக புரிந்து கொள்வர்.  யூக அடிப்படையிலான ஜோதிடம், சாஸ்திரம், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபட்டால் பெரும் பணமும், புகழும் அடைவர்.

பேச்சுத்திறமை, எழுத்தாற்றல் மிக்கவர்களின் நட்பை பயன்படுத்தி வி.ஐ.பி.க்கள் ஆகிவிடுவர்.  வியாபாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாளர்களாக இருப்பர்.  இதனால் வாடிக்கையாளர்களை அதிகமாகக் கவர்ந்து, கோடிகளை அடைந்து உச்சத்தில் இருப்பர்.

வாழ்வில் முதல் பகுதியில் நினைத்துப் பாராத அளவிற்கு புகழ் அடைவர்.  பிற்பகுதியில் பணம் குவியும்.  பொது காரியங்களில் அதிகம் ஈடுபடுவதால் பணத்தால் எந்த டென்ஷனும் இவர்களுக்கு வருவதில்லை.

படாடோபமான வாழ்க்கையில் மிகுந்த விருப்பமுடைய இவர்கள், சுற்றுலா விரும்பிகளாவர்.  நிறைய நண்பர்கள் இருந்தாலும் நெருக்கமாக யாரையும் வைத்துக்கொள்வதில்லை. மாபெரும் நிறுவனங்களின் பொறுப்பு இவர்களை வந்தடையும், அரசின் உயர்பதவிகளில் பதவி பெற வாய்ய்புண்டு. இந்த பெயரைக்கொண்டவர்கள் 2,6 ஆம் தேதி பிறந்திருந்தால் அவமரியாதை ஏற்படும்.

உஷ்ணம், காரம், உப்பு மிகவும் ருசித்து உண்பர்.  சிறிதளவு சாப்பிட்டாலும் சிறப்பாக உண்ண வேண்டும் என்பர்.  அழகை ரசிக்கும் இவர்களுக்கு வாழ்க்கைத் துணையும் அழகாகவே அமையும்.  ஆனாலும் கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டியாகவே இருப்பர்.

பகலில் நடப்பவை, சூரிய சக்தியால் இயங்குபவை, உஷ்ணம் சார்ந்தவை, ஏற்றுமதி, இறக்குமதி கமிஷன், கல்வி நிறுவனம் போன்ற தொழில்கள் இவர்களின் பெரும் வெற்றிக்கு வித்திடும். எங்கு சென்றாலும் தனித்துவம் வாய்ந்த இவர்கள், பிறரின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

முதல் எழுத்தாக `J’ வைப் பெற்ற பிரபலங்கள்
ஜவகர்லால் நேரு
ஜான்சி ராணி
ஜெயபிரகாஷ் நாராயணன்
ஜெயலலிதா
ஜோதிபாசு
ஜான்.எப்.கென்னடி

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top