புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கத்தோலிக்க மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலமான மடு அன்னையின் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. திருவிழா திருப்பலி இன்று காலை 7 மணிக்கு மன்னார் ஆயர் மேதகு ராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு கூடியுள்ளதாக மடு திருத்தல அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவிழா திருப்பலியில் கருதினால் மேதகு மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கத்தோலிக்க மறை மாவட்டங்களில் ஏனைய ஆயர்கள், குருக்கள், துறவிகள் கலந்து கொள்கின்றனர்.

திருவிழாவில் கலந்துகொள்வதற்காக இலங்கையின் பலபாகங்களில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மடு திருப்பதியில் கூடியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உட்பட அரசியல் தலைவர்களும் திருவிழாவில் இன்று பங்கேற்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top