புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிஸ்லாந்தில் சூரிச் மாநில நகர நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஆஸ்ட்ரியாவைத் தனது பூர்வீகமாகக் கொண்ட பியாங்கா(வயது 39) தான் கொலை செய்ததை கண்ணீருடன் ஒத்துக்கொண்டார்.


"குற்ற உணர்வோடு என்னால் வாழ முடியவில்லை" என்று நீதிபதியிடம் கூறினார்.

இது தவிர முதல் குழந்தையின் சாவு கூட இயற்கையானது அன்று, அந்த ஏழு மாதக்குழந்தையையும் அப்போது நான்தான் கொன்றேன் என தெரிவித்தார்.

கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதி அன்று இவர் கிறிஸ்துமஸ் பரிசுகளை வைக்க தனது குழந்தைகளின் அறைக்குச் சென்றபோது, திடீரென்று தலையணையை குழந்தையின் முகத்தில் வைத்து அழுத்திக் கொன்றதாக இவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முதலில் ஆண் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பின்பு பெண் குழந்தையின் அறைக்குள் சென்று அதனைக் கொன்றதாகக் கூறினார்.

இதற்கு முன்பு இவருடைய ஆண்குழந்தை ஒன்று ஏழு மாதத்தில் இறந்துபோனது.

அந்தக் குழந்தை அழுததைப் பொறுக்க முடியாமல், "கொஞ்சம் அமைதியாக இரு" என்று கூறிய பின்பும் அந்தக் குழந்தை அழுது கொண்டேயிருந்ததால் எரிச்சலடைந்து அதனையும் தலையணையால் அமுக்கிக் கொன்றதாகக் கூறினார்.

இரட்டைக் குழந்தை கொலைவழக்கு 2010ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது சந்தேகத்தின் அடிப்படையில் பியாங்காவோக்கு ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டது.

ஆனால் மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.

இங்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பியாங்காவே தான் செய்த கொலையை ஒத்துக்கொண்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top