புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தில்லு முல்லு படப்பிடிப்பின் போதுதான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் அவர்கள் மல்லேஸ்வரம்
பகுதியில் வசித்தனர்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா, கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தாராம். அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.

இது பற்றி ரஜினி உதவியாளர் சத்யநாராயணா கூறுகையில்...

அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார்.

லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவர்களுக்கு இடையேயான அன்பு வளர்ந்தது என்றார்.

ரஜினி சிறுவனாக இருந்தபோது கஷ்டப்பட்டது, குடும்பப் போராட்டம், இளம் வயதில் தாயை இழந்தது பற்றி லதா கொஞ்சம், கொஞ்சமாக தெரிந்து கொண்டார்.

அவருக்கு தாயின் அன்பு தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன் என்றார் லதா. பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார்.

லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்தே ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரனைத் தெரியும். லதாவின் சகோதரி சுதாவை ஒய்.ஜி. மகேந்திரன் மணந்திருந்ததால் ரஜினிக்கு பெண் கேட்கும் வேலை ஈசியாகிவிட்டது.

மேலும் சத்யநாராயணாவும் லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணம் குறித்து பேசி சம்மதம் வாங்கினர். இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார்.

ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவித்தார். உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார்.

அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top