புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழில் பானா காத்தாடி என்றபடம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. எனினும் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.


நான் ஈ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும்காலடி எடுத்து வைத்த இவர், இப்போது கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சமந்தாவுக்கு சரும நோய் வந்திருக்கிறது. அவருக்கு வெயில் ஒத்துக்காது என்றெல்லாம் செய்திகள் வந்தது. இதன் காரணமாக மணிரத்தினத்தின் கடல். ஷங்கரின் ஐ படங்களில் நடிக்கும் வாய்ப்பபை இழந்தார் என்று கூறப்பட்டது.

ஆனாலும் சமந்தா மீண்டும் வந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இடையில் என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை வாய் திறக்காமல் இருந்தவர் இப்போது அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது...

எனக்கு எந்த சரும நோயும் கிடையாது. அது மீடியாக்கள் எனக்கு கொடுத்த நோய். திடீரென்று ஒரு நாள் காய்ச்சல் வந்தது. டாக்டரிடம் சென்று பரிசோதித்து பார்த்ததில் என் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்காக பூரண ஓய்வும், சிகிச்சையும் தேவை என்று டாக்டர்கள் சொன்னதால் வீட்டில் இரண்டு மாதம் பெட் ரெஸ்ட் எடுத்தேன். இதில் என் முகமும், உடலும் சோர்வடைந்து விட்டது. இந்த நேரத்தில்தான் கடல் வாய்ப்பும் ஐ வாய்ப்பும் வந்தது. நழுவிப்போனது. மிகப்பெரிய இரண்டு வாய்ப்புகள் நழுவிப்போனதால் ரொம்பவே கலங்கிப்போனேன். ஆனாலும் தைரியமாக இருந்தேன். குணமாகி வந்தேன். இப்போது மீண்டும் பிசியாகி விட்டேன்.

கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என்பதை என் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்து விட்டேன்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top