புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட காசினி விண்கலம் கடந்த 2004-ம் ஆண்டு 7-வது கிரகமான சனிக்கிரகத்திற்கு அருகில் வந்தது.  29 வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றிவரும் இந்த
சனிக்கிரகத்தின் வடதுருவத்தில் அப்போது குளிர்காலம் நிலவியது. இதனால் அப்பகுதி அப்போது இருட்டாக இருந்தது.

இப்போது சனிக்கிரகம் சூரியனை நெருங்கி சுற்றி வருவதால் அங்கிருந்து சூரிய வெளிச்சத்துடன் கூடிய புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரிட்டனை விட 12 மடங்கு பெரிதான மிகப்பெரிய புயல் குறித்த புகைப்படம் ஒன்றையும் அந்த காசினி விண்கலம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த புயலானது வினாடிக்கு 150 மைல் வேகத்தில் வீசி வருவதாக கூறப்படுகிறது. புயல் வேற்று கிரகத்தில் வீசுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு வடதுருவத்தின் சூரிய வெளிச்சத்துடன் கூடிய புகைப்படங்கள் கடந்த 1981-ம் ஆண்டு வாயேஜர்-2 என்ற விண்கலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top