புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகப்பேற்றின்போது கர்ப்பிணியொருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அரசாங்க வைத்தியருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு எதிராக நேற்று வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் மகப்பேற்று சமயத்தின்போது கர்ப்பிணியை வல்லுறவுக்குட்படுத்தியதாக சந்தேகநபரான வைத்தியர் ஜயசாந்த பரணமன்ன என்பவர் மீதே சட்டமா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்தேநபர் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி மகப்பேற்று அறையில் வைத்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரான வைத்தியர், நீதவான் தேவிகா தென்னக்கோனினால் 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் இரண்டு சரீரப்பிணைகள் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணியான ஹிமாஸி பெரேரா ஆஜராகியிருந்ததுடன் சந்தேக நபரின் சார்பில் சட்டத்தரணி இனோகா பெரேரா ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top