புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலுக்கு 50 கி.மீ தொலைவில் உள்ள பக்ராம் விமானதளம், அமெரிக்க நிர்வாகத்தில் இயங்கி வருகின்றது. தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க
ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவி புரியும் நேட்டோ படைகள், இந்த விமானதளத்தில் இருந்துதான் இயங்கிவருகின்றன.

திங்களன்று, இங்கிருந்து கிளம்பிய ஏழு பேர் கொண்ட பயணிகள் சரக்கு விமானம் ஒன்று, கிளம்பிய சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது. விமானதளத்தின் எல்லைக்குள் விழுந்த விமானத்தை நோக்கி மீட்புக்குழுவினர் விரைந்தனர். ஆனால், அதில் சென்றிருந்த அனைவரும் இறந்திருந்தனர். இந்த விமானமும், அமெரிக்காவைச் சேர்ந்த தேசீய விமான சரக்கு நிறுவனத்தினரால் இயக்கப்பட்டது. இத்தகவலை உறுதி செய்த நேட்டோ படையினரின் தகவல் அதிகாரி, அந்த சமயத்தில் கிளர்ச்சி எதுவும் அங்கு நடைபெறவில்லை என்பதனையும் உறுதி செய்தார்.

தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நேட்டோ படையினர், தங்களின் தாக்குதலுக்கு இந்த விமானத்தளத்தையே பெரும்பான்மையாகப் பயன்படுத்த நேர்வதால், இங்கு விமானவிபத்துகள் நடைபெறுவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சென்ற சனிக்கிழமை அன்றும், நடைபெற்ற விமானவிபத்தில் அமெரிக்க வீரர்கள் நால்வர் பலியாக நேரிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட இறுதிக்குள் பெரும்பான்மையான வீரர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள நேட்டோ நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், பக்ராம் போன்ற விமானத்தளங்கள், சர்வதேச ராணுவ நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top