புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 54-வது லீக் போட்டி, ஐதராபாத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற
ஐதராபாத் அணியின் கேப்டன் சங்கக்காரா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக விஜய்யும், ஹசியும் களமிறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். விஜய் 20 பந்தில் 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, சென்னை அணி 5.2 ஓவரில் 45 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு ஹசியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

சென்னை அணி 17. 2 ஓவரில் 178 ரன் எடுத்திருக்கும் போது, ஹசி 67 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரி, 4 சிக்சர் அடங்கும்.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 72 பந்தில் 133 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த டோனி 4 ரன்னில் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன், ஜடெஜா ஜோடி சேர்ந்து விளையாடினார்.

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடிய ரெய்னா, 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

224 ரன்கள் என்ற கடின வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, அடுத்தடுத்து சீட்டுக் கட்டைபோல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. முக்கிய பேட்ஸ்மேன்கள் தவான், சங்கக்காரா, விஹாரி மற்றும் சமி ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னுடன் அவுட் ஆனார்கள்.

அந்த அணியில் அதிகபட்சமாக பட்டேல் மட்டும் 44 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றது, இதனால் ப்ளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

டெல்லி, கொல்கத்தா, புனே வாரியர்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top