புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 2-வது லீக் போட்டி இரவு 8 மணிக்கு புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில் புனே வாரியர்ஸ்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பேட்டிங் தேர்வு
செய்தார்.

தொடக்க வீரர்களாக பிஸ்லா- காம்பீர் ஜோடி களம் இறங்கியது. பிஸ்லா 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு வந்த காலிஸ் 2 ரன்னிலும், அடுத்து வந்த மோர்கன் 15 ரன்களிலும் அவுட் ஆனார்கள். காம்பீர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் வந்த டஸ்கதே 31, திவாரி 15 ரன்கள் எடுக்க கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் பின்ச் 5 ரன்னிலும், அடுத்து வந்த யுவராஜ் சிங் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த மாத்யூஸ் 40 ரன்களும், உத்தப்பா 31 ரன்களும் எடுத்தனர். அவர்களுக்குப்பின் வந்தவர்கள் ஒற்றை இலக்கு ரன்னுடன் வெளியேற புனே வாரியர்ஸ் அணி 19.3 ஓவரில் 106 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இதனால் கொல்கத்தா அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் பாலாஜி 3 விக்கெட்டும், அப்துல்லா, நரைன், காலிஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி 13 போட்டியில் 5-ல் வெற்றி பெற்றுள்ளது.



PL-T20-2013 Team Standings
TeamPWLNRPNRR
சென்னை சூப்பர் கிங்ஸ்13103020+0.68
ராஜஸ்தான் ராயல்ஸ்1394018+0.44
மும்பை இந்தியன்ஸ்1284016+0.64
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்1275014+0.56
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்1275014-0.22
கிங்ஸ் XI பஞ்சாப்1257010+0.11
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்1358010-0.07
டெல்லி டேர்டெவில்ஸ்123906-0.77
புனே வாரியர்ஸ்1321104-1.36

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top