புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் 66வது லீக் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.


டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

மும்பையில் அணியில் மேக்ஸ்வெல் மற்றும் தரே களம் இறங்கினார்கள். மேக்ஸ் வெல் அதிரடியாக விளையாடி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் தரே உடன் ஜோடி சேர கார்த்திக் களம் இறங்கினார்.

இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தார்கள். கார்த்திக் 21 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த தரே 37 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தானில் அணியில் டிராவிட் மற்றும் ரஹானே களம் இறங்கினார்கள். இருவரும் தலா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

அடுத்து வந்த பால்க்னர் 12 ரன்னிலும், சாம்சன் 4 ரன்னிலும், வாட்சன் 19 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள்.

7 வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பின்னி மற்றும் ஹோட்ஜ் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்த ஆரம்பித்தனர். பின்னி 37 ரன்னிலும், ஹோட்ஜ் 39 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
Top