புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் பரிதாபமாக இறந்ததை கண்ட தாயின்
நிலை அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் நாஸ்ரா காடூன், இவரது கணவர் 10 மாதங்களுக்கு முன் இறந்ததில் இருந்து, இவரது குடும்பத்திற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

அக்கம்பக்கத்தினர் செய்த உதவியில் காலத்தை தள்ளிவரும் இவர், வறுமைக்கு தனது 14 வயது மகள் மட்டும் 3 வயது மகனை பரிக்கொடுத்திருக்கிறார்.

கடும் வயிற்றுப்போக்கால் இக்குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கபட்டாலும், இவர்களது மரணத்திற்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம் என மனித உரிமை கண்காணிப்பு ஆணையத்தின் உறுப்பினரான சுருதி தெரிவித்துள்ளார்.இரண்டு குழந்தைகளின் மரணத்தை தடுக்கமுடியாமல் தவித்த நாஸ்ரா காடூனுக்கு தற்போது உணவில்லாமல் தவிக்கும் அவரது மற்ற மகள்களான நசீரா(18), நசியா(16), ஸைனா(12) ஆகியோரை காப்பாற்ற என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்.

வறுமையால் வாடும் இக்குடும்பத்திற்கு மாநில நலத்திட்டம் வாயிலாக 30,000 ரூபாய் நிதி உதவியும், அவர்கள் தங்குவதற்கு ஒரு சிறிய வீடும் அளிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
 
Top