புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பை: ஐபிஎல். T20 கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்ட பந்தயம் கட்டி அதில் ஏற்பட்ட லட்சக்கணக்கான ரூபாய்கள் நஷ்டத்தை ஈடுகட்ட உறவினரின் மகனை கடத்தி கொலை செய்த
சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.

தெற்கு மும்பை வைர புரோக்கர் ஒருவரின் 13 வயது மகனைக் கடத்தி ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டி பணம் கிடைக்காததால் ஆத்திரத்தில் சிறுவனை கொன்று வீசியுள்ள இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் ஆதித்யா ராங்கா. தந்தை பெயர் ஜிதேந்திரா. கடத்தி கொலை செய்தவர்கள் பெயர் ஹிமான்ஷு ரான்க்கா, பிஜேஷ் சாங்வி.

சம்பவம் நடந்த தினத்தன்று 6ஆம் வகுப்பு படிக்கும் ஆதித்யா, கேட்வாடியில் பவன்புரி குடியிருப்பில் தன் தாயுடன் இருந்ள்ளான். திங்கள் கிழமை தாயாருக்கு லேண்ட் லைனில் ஒரு அழைப்பு வந்தது. அதாவது ஆதித்யாவின் தந்தை ஏதோ சில சாவிகளை கொடுத்தனுப்பியுள்ளார் என்றும் கீழே வந்து அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நம்பி ஆதித்யாவை தாயார் கீழே அனுப்பினாள். அவ்வளவுதான் கீழே சென்ற ஆதித்யா அதன் பிறகு பிணமாகத்தான் கிடைத்துள்ளான்.

போலீஸ் தரப்பில் இந்த பயங்கரம் குறித்து தெரிவித்ததாவது: கீழே வந்த ஆதித்யாவை காரில் கடத்தப்பட்டுள்ளான். கடத்தப்பட்ட ஒரு மணிநேரத்தில் பையனின் தந்தை ஜிதேந்திராவுக்கு போன் செய்து கடத்தல் காரர்கள் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஜிதேந்திரா இது ஏதோ சூழ்ச்சி அழைப்பு, மிரட்டல் என்று அலட்சியம் காட்டி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

பிறகுதான் சூழலில் தீவிரம் புரிந்து புகார் கொடுக்கச் சென்றுள்ளார். அதுவும் யார் கடத்தினார்களோ அவர்களின் உதவியையும் நாடியுள்ளார் அந்த அப்பாவித் தந்தை. நேற்று இரவு 7 மணிக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவ்க்க கடத்தல் காரர்களுடனேயே சென்றுள்ளார் ஜிதேந்திரா. அவர்களும் அப்பாவிகள் போல் நடித்துள்ளனர்.

போலீஸ் உடனே ஆதித்யா கடத்தப்பட்ட இடத்தைக் காண்பிக்க கோரி அங்கு சென்றனர். அப்போது காரில் செல்லும்போது ஜிதேந்திராவின் காரில் இரு போலீஸ் காரர்கள் அமர, கடத்தல் காரனின் ஹோன்டா சிட்டியில் இரு போலீசும் சென்றனர். அப்போதுதான் பிஜேஷ் மாட்டினான். அவனது காரில் ரத்தமும் சிறுவனின் செருப்பும் இருந்துள்ளது.

செருப்புகள் சிறுவன் ஆதித்யாவினுடையது என்று தெரிந்தபிறகு பிஜேஷை பிடித்துச் சென்ற போலீஸ், நன்றாக 'விசாரித்துள்ளனர்'. உண்மையை ஒப்புக் கொண்டான் பிஜேஷ். ஹிமான்ஷுவும் தானும் திட்டமிட்டோம் என்று கூறினான்.

பிறகு இருவரையும் 'விசாரித்ததில்' சமீபத்திய T20 போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டபோது ரூ.7 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியானார்களாம். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி அதிகரிக்க சிறுவனைக் கடத்த திட்டமிட்டார்களாம். சரி ஏன் கொலை செய்தீர்கள் என்று போலீஸ் கேட்டதற்கு, சிறுவனைன் தந்தை தங்களது மிரட்டலை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை இதனால் ஏமாற்றமடைந்தோம் என்றும் மேலும் ஆதித்யாவை வெளியில் விட்டால் ஏற்கனவே நன்றாக தங்களைத் தெரிந்த அவன் நிச்சயம் அடையாளம் காட்டி விடுவான் என்ற அச்சத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
 
Top