புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய நபர் ஒருவர், அவர் மனைவியுடன் தேனிலவு அனுபவிக்க ரீயூனியன் தீவுக்கு சென்றுள்ளார்.
கடற்கரை கரையில் மனைவி அமர்ந்திருக்க கணவர்
மட்டும் கடலில் கரையோரமாக நீந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த சுறா இரண்டு முறை இவரைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு அருகில் நீந்திய இன்னொருவர், திடீரென தண்ணீரில் இரத்தம் பரவுவதைக் கண்டதும் அவசர உதவி கேட்டு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

உடனே மீட்புப்படை வீரர்கள் வந்து கடலில் குதித்து சுறா மீன்கள் தாக்கியவரை தேடி கரைக்குத் தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.

சுறா மீன் அவர் கையையும், தொடையையும் கடித்திருந்ததால் ரத்தம் ஏராளமாக வெளியேறி விட்டது. மேலும் அவரது நுரையீரலும், இதயமும் செயலிழந்து விட்டதால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

கரையில் இருந்த மனைவி அதிர்ச்சியால் மயக்கமடைந்துள்ளார். இதனால் அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டது.

பொதுவாக சுறாமீன்கள் மனிதரைக் கொன்று திண்பதில்லை. அவை தமது உணவான ஆமை அல்லது சீல் மீன் என்று நினைத்துத்தான் மனிதரின் கை கால்களைக் கடிக்கின்றன.

மேலும் அதிகாரிகள் இந்த ரீயூனியன் தீவில், சுறாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top