புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் சாக்லர் ஃபேகல்ட்டி ஆஃப் மெடிசின் அன்ட் தி ஷால்வடா மென்ட்டல் ஹெல்த் கேர் சென்டரின் டாக்டர் யூரி நிட்சன் தெரிவித்துள்ளார். இது குறித்த ஆய்வறிக்கை இஸ்ரேல் ஜர்னல் ஆஃப் சைக்கயாட்ரி அன்ட் ரிலேடட் சயன்சஸில் வெளிவந்துள்ளது.

எதிர்மறை எண்ணங்கள், குழப்பம்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அதற்கு மக்கள் அடிக்ட் ஆகிவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள், குழப்பம், கவலை, படபடப்பு, பிரமை ஆகியவை ஏற்படுமாம்.

தனிமையைப் போக்க ஃபேஸ்புக்கில் தஞ்சம்

பலர் தனிமையை விரட்ட ஃபேஸ்புக், ட்விட்டரை பயன்படுத்தத் துவங்கி அது இல்லாமல் தாங்கள் இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகிவிடுகின்றனர். இறுதியில் சமூக வலைத்தளங்களில் கிடைத்த நட்பால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. டாக்டர் நிட்சனிடம் சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் கிடையாய் கிடந்து அதில் இருந்து ஒரு நபர் தன்னை தொடுவதாக உணர்ந்துள்ளார். அதாவது அவருக்கு அப்படியொரு பிரமை ஏற்பட்டு அவர் பயப்படத் துவங்கியுள்ளார்.

சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்

சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி மனநிலை பாதிக்கப்படுபவர்கள் முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடையலாம் என்று டாக்டர் நிட்சன் தெரிவித்துள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top