
மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை மேலும் மூவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேசாலை, உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர் சுற்றுலா சென்றிருந்த போது குறித்த நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போதே நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேசாலை உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (வயது 33) என்ற குடும்பஸ்தரும் அதே கிராமத்தைச் சேர்ந்த அனுசியா (வயது 18) என்ற யுவதியுமே உயிரிழந்தவர்களாவர். இவர்களுடைய சடலங்கள் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக