புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



கனடா நாட்டினர் கோஸ்டா ரிச்சாவுக்கு பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அரசு எச்சரித்துள்ளது.

கடந்த வியாழன் அன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் திடீரென வீட்டிற்குள் புகுந்த ஒருவன் அங்கிருந்தவர்களைக் கட்டிப் போட்டுவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறான்.

வான்கூவரைச் சேர்ந்த பிராட் டீரிங் என்பவர் இந்தக் கொலைகாரனின் துப்பாக்கிக் குண்டுக்குப் கடந்தவாரம் பலியானார்.

காவல் பணியாளரைப் போல உடை உடுத்தி வியாழன் பிற்பகல் துப்பாக்கி ஏந்தியபடி சிலர் எஸ்காசு நகரில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாகப் புகுந்தனர்.

டீரிங்கையும்(42) இன்னும் இரண்டு ஆண்களையும், ஒரு பெண்ணையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர்.

டீரிங்கை நோக்கி கொலைகாரன் மூன்றுமுறை சுட்டதில் அவர் மயங்கிச் சாய்ந்தார்.

டக்ளஸ் ஸ்மித் என்ற துப்பறியும் நிபுணர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், கொலையுண்ட டீரிங் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தது கொலைகாரனின் கண்களை உறுத்தியிருக்கலாம் என்றார்.

டீரிங்கிடம் மூன்று பெரிய கார்கள் இருந்ததாகவும் அவர் மிகவும் ஆடம்பரமாகத் தன்னைக் காட்டிக் கொண்டதாகவும் கூறிய ஸ்மித், அவர் வீட்டைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் துப்பாக்கியுடன் கொள்ளைக்காரர்கள் அவர் வீட்டிற்குள் புகுந்திருக்கலாம் என்றார்.

வியாழக்கிழமை நடந்த டீரிங்கின் படுகொலையை எடுத்துக்காட்டிய கனடா அரசு கோஸ்டா ரிச்சாவில் பெருகிவரும் வன்முறையில் இருந்து தப்பிக்க அங்கு போவதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.




கொலையுண்ட பிராட் டீரிங்
 
Top