புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஷ்யாவில் விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளிக்கு விண்கலம் மூலம் அனுப்பிவைத்த எலிகள், நத்தைகள் மற்றும் சில நுண்ணுயிர்களில் பெரும்பாலானவை உயிருடன் திரும்பியுள்ளன.


ரஷ்ய நாட்டு விண்வெளி ஆய்வாளர்கள் செவ்வாயில் மனிதன் வாழ சாத்தியக்கூறுகளின் தன்மையை பற்றி அறிய விண்வெளிக்கு உயிரினங்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக பியான்-எம். என்ற விண்கலத்தில் 45 எலிகள், 15 பல்லிகள், நத்தைகள் மற்றும் தாவரங்களை வைத்து கடந்த மாதம் (ஏப்ரல்) விண்ணுக்கு அனுப்பியது.

அந்த விண்கலம் பூமியில் இருந்து 575 கி.மீட்டர் தூரத்தில் விண்வெளியில் ஒரு மாதமாக நிலை நிறுத்தப்பட்டிருந்தது. ஆய்வு முடிந்த நிலையில் ஓரன்பர்க் மாகாணத்தில் அது தரை இறக்கப்பட்டது.
 
Top