மூட்டு வலி மற்றும் மறதி நோயால் அவதிப்பட்டு வந்த மரியா என்ற 80 வயது மூதாட்டியை, பணிப்பெண் துன்புறுத்திவந்திருப்பது ரகசிய கமெராவின் மூலம் அம்பலமாகி உள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேன் ஓரோல்
என்ற பெண்ணின் தாய் மரியா(வயது 80). இவர் மூட்டு வலி மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரால் எழுந்து நடமாடவும், பேசவும் முடியாது.
என்ற பெண்ணின் தாய் மரியா(வயது 80). இவர் மூட்டு வலி மற்றும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரால் எழுந்து நடமாடவும், பேசவும் முடியாது.
எனவே இவரை பராமரிப்பதற்காக கேர் குவாலிட்டி அமைப்பில் சேர்த்தார். அங்கு ஜோனாதன் அகினோ என்ற பணிப்பெண் மூதாட்டியை கொடுமைப்படுத்துவதும், அவரை படுக்கையில் முரட்டுத்தனமாக உருட்டிவிடுவதும், அடிக்கடி அடிப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
இந்த காட்சிகள் அனைத்தும் ரகசிய கமெராவின் மூலம் வெளி உலகிற்கு அம்பலமாகியுள்ளது. இந்த கமெராவை கடந்த 2011ம் ஆண்டு யூன் மாதம் ஜேன் ஓரோல், அவரது தாயின் அறையில் ரகசியமாக பொருத்தினார்.
கொடுமைக்காட்சிகள் அடங்கிய ஒளிப்படச்சுருளை பிபிசிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுவரையிலும் கேர் குவாலிட்டி மிகச்சிறந்த பராமரிப்பு நிறுவனம் என அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது வெளியான இந்த காட்சியினால் கேர் குவாலிட்டி கமிஷன் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதனையடுத்து அந்த பராமரிப்பு மையத்தில் பதவி வகித்த முக்கிய பொறுப்பாளர்கள் 5 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
மூதாட்டியை அடித்து துன்புறுத்திய பெண்ணுக்கு 18 மாதம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக