ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற குழந்தைகள் திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜலவார்மாவட்டத்தில் உள்ள பிரித்திவிபுரா கிராமத்தில் 42 ஜோடி குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல்
கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள்
மற்றும் போலீஸ் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும மேற்பட்டவர்கள் அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு திருணம நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிராமமக்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக