மகளுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக பழ வியாபாரி கைது செய்யப்பட்டார். அம்பத்தூர் இந்திரா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (62). இவரது மகள் கவிதா, கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இதையடுத்து கவிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான பழ வியாபாரி கிருஷ்ணகுமாருக்கும் (42) கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம், குமாரசாமிக்கு தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகுமாரை குமாரசாமி கண்டித்துள்ளார். அதையும் மீறி தொடர்பு நீடித்துள்ளது.
இந்நிலையில், நேற்று அம்பத்தூர் மார்க்கெட் பகுதியில் கவிதாவுடன் கிருஷ்ணகுமார் பேசிக் கொண்டிருந்தார். இதை அறிந்த குமாரசாமி, அங்கு சென்று கிருஷ்ணகுமாரிடம் தட்டி கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குமாரசாமியை சரமாரியாக குத்தினார்.
படுகாயம் அடைந்த அவர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணகுமாரை கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக