கல்பாக்கம் அணு சக்தி ஊழியர், உடலை பிளேடால் கிழித்து, தற்கொலை செய்து கொண்டார். கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் கீழ் இயங்கும் அணுசக்தி மறுசுழற்சி பிரிவில், அறிவியல் பிரிவில் பணிபுரிந்தவர்
முகமது முஸ்தபா,24. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். இவரும், நர்கீஸ் என்பவரும் கல்பாக்கம் நகரியத்தில் வசித்து வந்தனர். நேற்று மாலை 6.30 மணிக்கு, வீடு திரும்பிய வர்கீஸ் கதவு உட்புறமாக தாழிடப்பட்டிருந்ததால்,
கல்பாக்கம் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் கதவை உடைத்தனர். அங்கு, குளியலறையில் ரத்த வெள்ளத்தில் முஸ்தபா பிணமாகக் கிடந்தார். அவருடைய கழுத்து, மார்பு ஆகிய இடங்கள், பிளேடால் அறுபட்டிருந்தன.
பிளேடுக்கு அருகே கிடந்த கடிதத்தில், 'தனது இறப்பிற்கு தானே காரணம்' என, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. போலீசார் பிணத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக