புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இளம் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடக்க முயன்ற தனியார் கல்வி நிலைய இயக்குநர் ஒருவரை பொலிஸார் இன்றைய தினம் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் உள்ள எடியூகெயா தனியார் கல்வி நிலையத்தில்
இடம்பெற்றுள்ளது.

மேற்படி தனியார் கல்வி நிலையம் இன்றைய தினம் மூடியிருந்தபோது பெண்ணொருவரை இயக்குநர் அழைத்து வருவதை அருகிலுள்ள பொது மக்கள் சிலர் அவதானித்துள்ளனர்.அதன்பின்னர் அவரை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது அவர் குறித்த பெண்ணுடன் தகாத நடத்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர் இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண் யுத்தத்தினால் ஒரு காலை இழந்தவர் என்பதும் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top