புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கள்ளக்காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்து தாய் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அபர்ணா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 35, இவரது மனைவி ஜுவா, 28, ஓட்டல் பணியாளர். 

இவர்களுக்கு கோமதி, 12, ஷாலினி, 11, திலீப் குமார், 10 ஆகிய குழந்தைகள் உண்டு. இதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 23, இவருக்கு திருமணமாகி, மனைவி தலைப்பிரசவத்திற்கு தாய் வீடு சென்றுள்ளார். 

மனைவி இல்லாத காலத்தில் ஓட்டலில் சாப்பிட்டபோது, ஜுவாவுடன் தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ராஜேஷின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையில் இருந்த கள்ளக்காதல் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. 

இதனால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதிலிருந்து ஜுவாவுடன் இருந்த நட்பை ராஜேஷ் முறித்துக் கொண்டார். இதற்கிடையில், ராஜேஷை திருமணம் செய்ய ஜுவா வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுக்கவே, தன் மூன்று குழந்தைகளுடன் விஷம் குடித்தார். உறவினர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். திருமுல்லைவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top