புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நேபாள நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களின் 2 1/2 வயது பெண் குழந்தையுடன், சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி குஜராத் மாநிலத்திற்கு வந்தனர். வீர்பூர் பகுதியில் இருக்கும் ஒரு
தொழிற்சாலையில், செக்யூரிட்டி கார்டாக குடும்பத் தலைவருக்கு வேலை கிடைத்தது.

தொழிற்சாலை அருகிலேயே மனைவி, மகளுடன் வசித்து வந்த அவர், சமீபத்தில் நேபாளத்தில் இருந்து தனது மனைவியின் தம்பியை இந்தியாவுக்கு வரவழைத்தார். தான் வேலைசெய்யும் இடத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் மைத்துனருக்கு வேலை வாங்கித்தந்து, அவரை தனியாக தங்க வைத்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது அக்கா வீட்டுக்கு வந்த அந்த நபர், வீட்டில் இருந்த 2 1/2 வயது பெண் குழந்தையை இருளான ஒரு பகுதிக்கு தூக்கிச் சென்று மிருகத்தனமாக குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பயத்திலும், வலியினாலும் குழந்தை கதறி அழவே, ஆத்திரமடைந்த அவன், அருகில் இருந்த முட்புதர் ஒன்றில் குழந்தையை தூக்கி வீசினான்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி வாசிகள், தப்பியோட முயன்ற குழந்தையின் தாய் மாமனை மடக்கிப் பிடித்து, குழந்தையை முட்புதரில் இருந்து காப்பாற்றி, பெற்றோரிடமும் பிடிபட்ட நபரை போலீசாரிடமும ஒப்படைத்தனர்.

உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கதறித்துடித்த குழந்தை ஹலோல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வடோடராவில் உள்ள பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அந்த 2 1/2 வயது குழந்தை, இன்று உயிரிழந்தது.

ஹலோல் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட அந்த குழந்தையின் இறுதி ஊர்வலத்தில், உள்ளுர் வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர். குழந்தையின் மரணத்துக்கு காரணமான காமக்கொடூரனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும என்று குழந்தையை பறிகொடுத்த தாய், கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Top