மொனராகலை - போபிட்டிய - அம்பகஸ்ஹந்திய பகுதியில் 53 வயது தாய் ஒருவர் தனது 33 வயது மகளால் கத்தியால் வெட்டிக் - குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதுடைய மகள் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
மகளுக்கு மருந்து வழங்க தாய் சென்ற வேளை ஏற்பட்ட பிரச்சினையால் இக்கொலை புரியப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட மகள் தப்பிச் சென்றுள்ளார்.
மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.