பாகிஸ்தானின் பைசாலாபாத்தைச் சேர்ந்தவர் சாஜிதா பீபி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாயிஸ் ரசூல் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பாயிஸை சாஜிதா
விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் பாயிஸ் தனது கூட்டாளிகள் உதவியுடன் நேற்று சாஜிதாவை கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரது கைகளை கட்டிவிட்டு, மூக்கை அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதுதொடர்பாக சாஜிதா கூறுகையில், ‘பாயிஸ் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். போதையில் வந்து என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்தார். இதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டேன். அதன்பிறகும் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார். இப்போது என்னை கடத்தி மூக்கை வெட்டிவிட்டார்’ என்றார்.