சூரிய மண்டலத்தில் ‘இசோன்’ என்ற வால் நட்சத்திரம் கடந்த செப்டம்பரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அது சூரிய மண்டத்தில் இருந்து விலகி சூரியனை நோக்கி
வருகிறது.
இது அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் சூரியன் அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. எக்ஸ்ரே டெலஸ்கோப் மூலம் மட்டுமே காண முடியும். இந்த நட்சத்திரம் சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக இது கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை லண்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் மைனர் பிளானட் சென்டர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 20-ம் நூற்றாண்டில் ஹேல்-பாட் என்ற வால் நட்சத்திரம் அதிகம் ஒளிரும் தன்மையுடன் திகழ்ந்தது. 1997-ம் ஆண்டில் இதை பார்க்க முடிந்தது.
இது சந்திரனுக்கு போட்டியாக அதிக வெளிச்சத்துடன் ஒளிரும் சக்தி கொண்டது. எனவே, இதை ‘சூப்பர் வால் நட்சத்திரம்’ என அழைக்கின்றனர்.
அதை தொடர்ந்து இந்த 21-ம் நூற்றாண்டில் முதன் முறையாக அதிகம் ஒளிரும் வால் நட்சத்திரமான ‘இசோன்’ தெரிய உள்ளது.