பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி செல்வி. இவர்களது மூத்த மகள் பரமேஸ்வரி (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார்.செல்வி ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதனால் இரவில் தாமதமாகத்தான் வீட்டுக்கு வருவார். இந்த நேரங்களில் பர மேஸ்வரி பக்கத்தில்
வசித்து வரும் ரபீக்- கலைவாணி தம்பதியின் வீட்டில் இருப்பார். தாய் செல்வி வந்தவுடன் வீட்டுக்கு வருவார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் வழக்கம்போல பரமேஸ்வரி, கலைவாணியின் வீட்டில் அமர்ந்து இருந்தார். அப்போது ரபீக் வீட்டில் வைத்தே மது அருந்தியுள்ளார். கலைவாணிக்கும் குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. 2 பேரும் சேர்ந்து பரமேஸ்வரியை வலுக்கட்டாயமாக பீர் குடிக்க வைத்துள்ளனர்.
பின்னர் போதையில் தள்ளாடிய அவரை கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். அப்போது பரமேஸ்வரியை ஆபாசமாகவும் படம் எடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கலைவாணிக்கும், பரமேஸ்வரியின் தாய் செல்விக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த கலைவாணி, பரமேஸ்வரியிடம் சென்று என்னுடன் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று உன் அம்மாவிடம் சொல்லிவிடு. இல்லையென்றால் நீ பீர் குடிக்கும்போது எடுத்த போட்டோக்களை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுபற்றி தாயிடம் கூறி வருத்தப்பட்ட பரமேஸ்வரி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் ரபீக்கும், கலைவாணியும் செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால்தான் பரமேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது உறுதியானது.
இதைத்தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்போனில் பதிவாகி உள்ள போட்டோக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கலைவாணியும், ரபீக்கும் இதுபோல வேறு யாரையும்