மூன்று நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவு 200 இற்கு மேற்பட்டோர் பலி
ஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள்
செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர்.
உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியாயுள்ளனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோங்களில் கிடந்துள்ளன. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலந்தில் உறைபனி பெய்கின்றது. இங்கு ஒரு மாதத்தில் 49 பேர் குளிர் தாங்காமல் பலியாகியுள்ளனர என்று தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக