முறையாக கற்பழித்து சூறையாடப்படும் பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவி ஒருவர் காட்டில் வைத்து கற்பழிக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்ட சம்பவத்தை பல இணையத் தளங்களும் போட்டி பிரசுரிப்பதை காண முடிகிறது .. உங்களுக்கென்ன போதுமான ஆட்களை
உள்ளெடுத்தால் போதும் !
வடநாட்டில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டாள் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்கள், கட்சிகள், அமைப்புகள் வெளிச்சம் போட்டு காட்டி கண்டனங்களும், எதிர்புக்களும் தெரிவிக்கப்பட்டன. ஆனால் தூத்துக்குடியில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு முற்புதறினுள் தூக்கி வீசப்பட்டு கிடந்தாள். இந்த செய்தியை எவன் பொருட்டாக எடுத்தான்? எத்தனை ஊடகங்கள் இதை வெளிக்கொணர்ந்தது? எத்தனை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன?
டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கு நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர்?
ஆர்ப்பாட்டம் எல்லாம் அவரவர்களை பிரபலப்படுத்த மட்டுமே என்பது இப்போது தெளிவாகிறது
0 கருத்து:
கருத்துரையிடுக