இந்தியாவில் "என்னை கெடுத்தவர்களை போலீசார் கைது செய்து விட்டார்களா"மாணவி
ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் உடல்நிலை தேறி வருகிறது. அவர், ‘என்னை கெடுத்தவர்களை போலீ சார் கைது செய்து விட்டார்களா?’ என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார்.டெல்லியில் கடந்த 5 நாட்களுக்கு
முன் இரவில் உறவினருடன் பஸ்சில் பயணம் செய்த 23 வயது மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் பலாத்காரம் செய்து பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியது. பலாத்காரம் செய்வதற்கு முன்னதாக அந்த மாணவியையும் அவரது உறவினரையும் அந்த கும்பல் இரும்பு குழாயால் தாக்கியது. இதனால் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி, இப்போது சப்தர் ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர கண்காணிப்பு பிரிவில் (ஐசியு) சேர்க்கப்பட்டுள்ள அந்த மாணவிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அதானி தலைமையில் டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.அவரது உடல்நிலை பற்றி நிருபர்களிடம் டாக்டர் அதானி நேற்று கூறியதாவது:மாணவியின் உடல்நிலை தேறி வருகிறது. அவர் மிகவும் மன உறுதி படைத்தவர். அதனால் எந்த சிகிச்சை அளித் தாலும் அவரது உடல்நிலை அதை ஏற்றுக் கொள்கிறது.
இரும்பு குழாயால் தாக்கப்பட்டதில் அவரது குடல் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவருடன் அவரது பெற்றோரும் உறவினர்களும் அருகிலேயே இருக்கின்றனர். இரவில் நன்றாக தூங்கினார். சொல்வதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது. கண்ணை திறந்து பார்க்கிறார். செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதால் அவரால் பேச முடியவில்லை. ஆனால் அவர் தான் நினைத்ததை பெற்றோர்களிடம் எழுதி காட்டுகிறார். ‘நான் நிச்சயம் பிழைத்து விடுவேன். தைரியமாக இருங்கள். என்னை கெடுத்த பாவிகள் போலீசில் சிக்கி விட்டார்களா? இல்லையா? அவர்களை போலீசார் கைது செய்து விட்டார்களா?’ என்ற எழுதி கேட்கிறார். அவரது ரத்த அழுத் தம், சிறுநீர் வெளியேறுதல் மற்றும் நாடித்துடிப்பு போன்ற அனைத்தும் எப்போதும்போல சீராக உள்ளன. அவர் சுயமாக மூச்சுவிட துடிக்கிறார். அதற்கான முயற்சியில் அடிக் கடி ஈடுபடுகிறார். ஆனால் குடலில் இழப்பு ஏற்பட்டு, செயற்கை முறையில் சுவாசிப்பதால் சுயமாக மூச்சுவிட அனுமதிப்பது சரியல்ல. இவ்வாறு டாக்டர் அதானி கூறினார்.
அபாயம்
எதுவுமில்லை
மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி இப்போது சுயமாக சுவாசிக்கிறார். அவருக்கு செலுத்தப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட குடல் பகுதியில் இருந்து லேசாக சீழ் வடிகிறது. அதை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை யில் சீரான முன்னேற் றம் காணப்பட்டாலும் சில சமயம் மோசமடைகிறது. இருந்தாலும் உடல்நிலையில் அபாயம் எதுவும் இல்லை. மேற்கண்ட தகவலை மாணவிக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் அதானி நேற்று மாலை தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக