புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாயன் காலண்டர் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற புரளி ஒருபுறம் பரவியுள்ள நிலையில், மாயான் காலண்டர் முடிந்து புதிய யுகம் பிறப்பதாக மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் தொன்மையான நகரமான சிசென் இட்சாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய
யுகம் பிறக்கும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மெக்ஸிகோவில் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த புதிய யுக கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்றாலும், அங்குள்ள தொன்மை வாய்ந்த பிரமிடு பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி புது யுகத்தை வரவேற்றனர். அவர்களின் கருத்துப்படி மாயன் காலண்டர் மீண்டும் முதலில் இருந்து புதிதாகத் தொடங்குகிறது.

அமெரிக்க பழங்குடியின மக்களான மாயன் இனத்தவர் கி.மு.900ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்தபோது இக்காலண்டரை உருவாக்கினர். அவர்கள் வாழ்ந்த மிகப்பெரிய நகரங்களில் சிசென் இட்சாவும் ஒன்று. அங்கு மாயன் நாகரிகத்தை வெளிப்படுத்தும் கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் மிச்சங்கள் அதிகம் உள்ளன. இப்போது அப்பகுதி அந்நாட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. யுனெஸ்கோவால் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாயன் இனத்தவர் இப்போதும் வாழ்ந்து வரும் குவாதமாலாவில் புது யுக பிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அதிபர் ஓட்டோ பிரிஸ் தொடங்கிவைத்தார். அமெரிக்க கண்டத்தில் மாயன்கள் வாழ்ந்த பகுதிகளைப் பார்வையிட முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top