புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


20 வயது அழகிய யுவதியுடனான கள்ளக் காதல் கண்களை மறைத்தமையால் மனைவி, பிள்ளைகளை கொன்ற மகா பாதகனை குறித்த பதிவு இது.


கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான இரத்மலானையில் குருடர் மற்றும் செவிடர் பாடசாலைக்கு அருகில் உள்ள ஒரு பெரிய மாடி வீடு. கடந்த 18 ஆம் திகதி அதிகாலை இங்கு ஒரே பரபரப்பு. வீட்டில் உள்ள அறை ஒன்றில் தீ பிடித்து 31 வயதுத் தாயும், இரு குழந்தைகளும் இறந்து விட்டனர் என்பதுதான் முதலில் வெளிவந்த செய்தி. மூத்த குழந்தைக்கு மூன்று வயது. இளையது ஒரு மாதக் குழந்தை.

பொலிஸார் விரைந்து சென்றனர். இது ஒரு ஆட்கொலையாக அல்லது தீ விபத்தாக இருக்க வேண்டும் என்பது பொலிஸாரின் ஆரம்ப அனுமானமாக இருந்தது.


ஆனால் தொடர்ந்து விசாரித்துக் கொண்டு சென்றபோது பெண்ணின் கணவன் அதாவது குழந்தைகளின் தகப்பன் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இச்சந்தேகம் வலுவடைந்தது.

இதற்கு நியாயமான காரணங்கள் பல இருந்தன. தீப்பிடித்த அறைக்குள் கணவன் உறங்கி இருக்கவில்லை, இன்னொரு அறைக்குள்தான் உறங்கி இருக்கின்றார். மெழுகுதிரி ஒன்றையும், தீப்பெட்டி ஒன்றையும் தீப்பிடித்த அறைக்குள் இருந்து பொலிஸார் கண்டு பிடித்து இருந்தனர். மின்சார ஒழுக்கு அறைக்குள் ஏற்பட வாய்ப்பே இருந்திருக்கவில்லை.

இவற்றை எல்லாம் விட மிக முக்கியமான ஒரு காரணம் இளைய தாயும்,மூத்த குழந்தையும் கழுத்து நெரிக்க்ப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையிட்டு இருந்தார்.

எனவே இப்படுகொலைகளின் முக்கிய சந்தேக நபராக கணவன் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற சந்தேகத்தில் வீட்டுப் பணிப் பெண் கைது செய்யப்பட்டார்.

மனைவி, பிள்ளைகளை கொன்றமையை பொலிஸ் விசாரணையில் மெல்ல ஒப்புக் கொண்டார் இக்கணவன். ஆயினும் இதில் ஒரு பெரிய பொய்யை சொல்லி இருந்தார். இரண்டாவது குழந்தை மனைவிக்கு கள்ளத் தொடர்பு மூலம் பிறந்து இருந்தது, இதுதான் இம்முக்கொலைகளை மேற்கொள்ள காரணம் என்றும் சொன்னார்.

ஆனால் பொலிஸார் உண்மையை கறந்து விட்டனர்.

இவருக்குத்தான் 20 வயது யுவதியுடன் கள்ளத் தொடர்பு. யுவதி நீர்கொழும்பைச் சேர்ந்தவர், பணக்காரி, உயரிய தொழிலில் இருப்பவர். இக்கள்ளத் தொடர்பு குறித்து மனைவிக்கு இவர் சொல்லி இருக்கின்றார். இதனால் முதல் நாள் நள்ளிரவு 12.00 மணி அளவில் இருவரும் பயங்கர வாய்த் தகராறு ஏற்பட்டு விட்டது. கோபத்தின் உச்சத்துக்கு சென்ற கணவன் கழுத்தை நெரித்து மனைவியை கொன்று விட்டார். ஆனால் இக்கொலையை மூத்த மகன் கண்டு விட்டார், அழுது கொண்டு அறையை விட்டு வெளியேற முயன்று இருக்கின்றார்.

ஆனால் மகனையும் பிடித்து மூச்சுத் திணறடித்து கொன்று விட்டார். ஒரு மாத குழந்தையை இறந்த மனைவியின் மார்பகங்களுக்கு அருகில் கிடத்தினார். மூவரையும் தூங்குகின்ற கோலத்தில் மெத்தையில் கிடத்தினார். நுளம்பு வலையால் மெத்தையை மூடினார். நுளம்பு வலையில் வாசனைப் பொருள் ஒன்றை தெளித்தார். தீக்குச்சியால் மெழுகுதிரியை பற்ற வைத்து மெத்தைக்கு தீ மூட்டினார். அறையை பூட்டினார். பின் எதுவுமே நடக்காதது போல மேல் மாடி அறைக்குள் வந்து படுத்து விட்டார்.

இவரது இப்படுகொலைகளை வீட்டில் வேறு எவரும் அறிந்து இருக்கவில்லை என்று சொன்னார். ஆனால் இவ்வீட்டில் இவரது தாய் உட்பட 15 பேர் தங்கி இருந்திருக்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு கொலை குறித்து எதுவுமே தெரியாது.

இவரது கள்ளக் காதல் இரண்டாவது குழந்தை பிறக்கின்றமைக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பித்து இருக்கின்றது என்றும் மசாஜ் கிளினிக்குகளுக்கு செல்கின்ற வழக்கம் உடையவர் என்றும் பொலிஸாருக்கு கூறி இருக்கின்றார். இவர் கள்ளக் காதலியை திருமணம் செய்ய விரும்பி இருக்கின்றார். ஆயினும் மனைவியிடம் விவாகரத்துக் கேட்க வெட்கப்பட்டு இருக்கின்றார்.

இவரை பொலிஸார் நீதிமன்றில் ஆஜராக்கி விளக்கமறியலில் போட்டு உள்ளார்கள்.
:

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top